i

யார் இந்த அய்யப்பன் சிங்கராசு ??

யார் இந்த அய்யப்பன் சிங்கராசு ?? என்ற தலைப்பில் நமது புலன் விசாரணை என்ற மாத இதழில் ஆகஸ்ட் 2020 இல் வெளிவந்த கட்டுரை ! உங்கள் பார்வைக்கு !

அரசியல் தலைவரும் இல்லை, சாதி கட்சி தலைவரும் இல்லை ஆனால் பல்வேறு தன்னலமற்ற சமுதாய பணிகள் மூலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவராக வளர்ந்து வரும் அய்யப்பன் சிங்கராசு செய்த சாதனையை பற்றி எங்கள் நமது புலன் விசாரணை குழு ஆய்வு செய்து இங்கு வெளியிடுகிறோம்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா நல்லாடை பனங்குடி கிராமத்தில் திரு.சிங்கராசு - திருமதி.சாவித்திரி ஆகியோருக்கு மூத்த மகனாக பிறந்தார். பள்ளி படிப்பை தன் சொந்த மாவட்டத்தில் நல்ல மாணவன் என்ற பெயருடன் படித்து முடித்தார். வங்கியில் கடன் பெற்று கல்லூரி படிப்பை JJ Engineering College of Technology, Trichy இல் முதல் வகுப்பில் பொறியியல் பட்டம் பெற்றார்

மிகப்பெரிய லட்சிய வெறியுடன் 2001 ல் சென்னை நோக்கி பயணம். 2001 ல் மாணவர்கள் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு நோக்கி படையெடுத்த காலம்

தம் தாய் தமிழ் நாட்டு மக்களிடம் இருந்த அன்பின் காரணமாக வெளிநாடு செல்வதை தவிர்த்து சென்னையில் பல்வேறு துறைகளில் தனது ஆர்வத்தை காட்டினார். சென்னை வாழ்க்கையில் பசியின் கொடுமை மற்றும் ஏழைகளின் துயரத்தை தனது அனுபவத்தின் மூலம் தெரிந்து கொண்டார்.

பல்வேறு தோல்விகள் கண்டாலும் முயற்சியே பயிற்சியாய்ஊக்கத்துடன் லட்சிய வெறியில் 10 ஆண்டுகள் தோல்விகளை வெற்றி படிகட்டுகளாக மாற்றியதன் விளைவு 2012 ஆம் ஆண்டு அனுபவம் மற்றும் The institution of engineers India மற்றும் The institution of valuers India ல் பெற்ற சான்றிதழ்கள் உதவியுடன் Valueguru Charted engineersand valuers Pvt Ltd, என்ற நிறுவனத்தை தொடங்கி அதன் வாயிலாக ஏழை மாணவர்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்தார்.

சென்னையில் ஆரம்பிக்கபட்ட நிறுவனம் தூத்துக்குடி, பெங்களூர், மும்பை, டெல்லி, குஜராத் என அனைத்து இடங்களிலும் மற்றும் வெளிநாடுகளிலும் அதன் கிளைகளை நிறுவினார்

தர சான்றிதலுக்கான Type A சான்றிதழ் NABCB (National Accreditation Board for Certification Bodies) under quality council of India விடம் இருந்து chief commissioner முன்னிலையில் வாங்கி நிறுவனத்திற்கு பெருமை சேர்த்தார்.

இவர் நேர்மையான முறையில் நிறுவனத்தை நடத்தி கடந்த 8 ஆண்டுகளில் சுமார் 8668 கோடிகள் அளவிற்கு சுங்க துறையில் இயந்திரங்களுக்கு மதிப்பீடு செய்து சுமார் 610 கோடிஅளவிற்கு வருமானத்தை மத்திய அரசுக்கு இறக்குமதி வரிகள் மூலம் பெருக்கி உள்ளார் என்பது மிகவும் பெருமைக்குரிய மகிழ்ச்சியான செய்தி

தான் மட்டும் வாழாமல் தன்னை சார்ந்தவரும் வாழவேண்டும் என நினைக்கும் அய்யப்பன் சிங்கராசு தன் நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களின் அன்புகுரியவராக மாறிபோனார்

தான் கண்ட வறுமை மற்றும் ஏழை மக்களின் மேல் உள்ள அன்பு கருணை காரணமாக 29 ஜூலை 2019 ல் தனது பிறந்த நாளன்று தனது பிறந்த ஊரில் மயிலாடுதுறை சுற்றியுள்ள மக்களின் நன்மைக்கு "அய்யப்பன் சிங்கராசு மக்கள் சேவை அறக்கட்டளை" நிறுவியதோடு சிறப்பாக தொடர்ந்து நடத்தி வருகிறார்

இந்த அய்யப்பன் சிங்கராசு மக்கள் சேவை அறக்கட்டளை மூலம் தனது சொந்த வருமானத்தில் பெரும்பகுதியை ஏழை எளிய மக்களின் வாழ்க்கைக்கு உதவி வருகிறார்

இதுவரை அய்யப்பன் சிங்கராசு மக்கள் சேவை அறக்கட்டளை கடந்து வந்து பாதை :

அய்யப்பன் சிங்கராசு மக்கள் சேவை அறக்கட்டளை தன்னலமற்ற பாகுபாடு இல்லாமல் தன் பணியை ஆற்றுகிறது. அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்

ஏழைபெண்ணிற்கு திருமண உதவி புரிந்து திருமணம் நடத்தி வைத்தது !

அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் அவர்களுக்கு தேவையான உதவிபொருட்கள் !

அன்னதானங்கள் !

இரத்ததானம் !

உயிர் காக்கும் அவசர ஊர்திக்கு நிதி உதவி !

இயற்கை பாதுகாப்பிற்க்கு மரம் நடுதல் !

மரக்கன்றுகள் வழங்குதல் !

குழந்தைகளுக்கு கல்வி உதவிகள் !

ஆதரவற்ற குழந்தைகளுக்கு புத்தாடைகள் மற்றும் உதவி பொருட்கள் !

வயதில் மூத்த பெரியோர்களுக்கு வேட்டி சேலைகள் வழங்குதல் !

ஏழை எளிய மக்களுக்கு வீடு கட்டி கொள்ள நிதியுதவி !

மயிலாடுதுறை மாவட்டம் வேலம்புதுக்குடியில் நூலகம் அமைக்க பண உதவி !

மாற்றுத்திறனாளிக்கு தொழில் தொடங்க உதவிகள் !

இளைஞர்களின் விளையாட்டை ஊக்குவிக்கும் விதமாக:

மயிலாடுதுறை மாவட்டம் நல்லாடையில் மாநில அளவில் கைப்பந்து போட்டிகள் நடத்துவதற்காக பண உதவி மற்றும் பரிசு பொருட்கள் !

இளம் Sailing வீரருக்கு வெளிநாடு சென்று விளையாட்டுகளில் கலந்து கொண்டு வெற்றிபெற ஊக்கத்தொகை Rs. 200000/- !

மயிலாடுதுறை மாவட்ட கிராமங்களில் இளைஞர்கள் கபடி மற்றும் Cricket போட்டிகள் நடத்த உதவிகள் !

மயிலாடுதுறை மாவட்டம் சுற்றியுள்ள கிராமங்களில் பொங்கல் விழா மற்றும் விளையாட்டு நடத்த உதவிகள் மற்றும் பரிசுகள் சுவர் கடிகாரம் மற்றும் நாட்காட்டிகள் !

சாதி மதம் பார்க்காமல் ஆன்மீகத்தை ஊக்குவிக்கும் விதமாக :

மயிலாடுதுறை மாவட்டத்தில் நீலவெளி கிராம பள்ளிவாசல் முன்பு இரும்பு கூரை அமைத்து கொடுத்தது

பிள்ளையார் கோவில் கட்டி தான் பிறந்த ஊருக்கு வழங்கியது

பனங்குடி மாரியம்மன் கோவில் இரும்புகூரை அமைத்து கொடுத்தது !

மயிலாடுதுறை மாவட்டம் காருகுடி கோவிலுக்கு இரும்பு கூரை அமைத்து கொடுத்தது !

மயிலாடுதுறை மாவட்டம் நெய்வாசல் பிள்ளையார் கோவில் சீரமைப்பு பணிக்கு பண உதவி !

நல்லாடை கண்ணிகோவில் கட்டுமானப்பணி ஆரம்பம் !

என ஆன்மிக பணிகள் ஏராளம் !

கொரோனா ஊரடங்கு கால உதவிகள் :

கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏராளமான உதவி பொருட்கள் அரிசி, காய்கறிகள் என கிராமம் கிராமமாக சென்று ஏழை எளிய மக்களுக்கு வீடு வீடாக சென்று வழங்குதல்

பண உதவி, அரிசி, காய்கறிகள் என திருநங்கைகளுக்கு இந்த இக்கட்டான நேரத்தில் உதவியது !

விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் சென்று உதவிகள் !

கொரோனா காலத்தில் மாணவ மாணவிகளின் மன உளைச்சலை போக்கி அவர்களை உற்சாக படுத்தும் நோக்கில் மாபெரும் இணையவழி திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, பரத நாட்டிய போட்டி, பேச்சு போட்டிகள் என சிறப்பாக நடத்தி சிறப்பான பரிசுகள் LED TV, Antroid Phone, Cycle மற்றும் பல பரிசுகள் என போட்டிகள் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது

இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தும் விதமாக பாராட்டு மற்றும் பரிசு விழாக்கள் மற்றும் அய்யப்பன் சிங்கராசு அவர்களின் சமுதாய சிந்தனை உரைகள் மற்றும் கவிதைகள் என என்னற்ற பணிகள் !

இவ்வாறு ஏழை மக்களுக்கான கல்வி, மருத்துவம், திருமணம், அவசர கால உதவிகள், விளையாட்டு, மாற்று திறனாளிகள், திருநங்கைகள், ஆன்மிக பணிகள் என அனைத்து தரப்பினருக்கும் பொதுவான உயர்ந்த மனிதனாக வாழும் மயிலாடுதுறை மாவட்ட மண்ணின் மைந்தன் அய்யப்பன் சிங்கராசு அவர்களை வாழ்த்துகிறோம்...,

Recent Activites

We provided by our Social Welfare - CORONA RELIEF WORKS

activities
activities
activities
activities

0+

FAMILIES

0+

STUDENTS

0+

WOMENS

0+

FARMERS

To work with us

Are you ready to server the society.. they why stand alone.. join with us.. lets work together..